இந்திய சீன எல்லையில் கடந்த மாதம் ஏற்பட்ட இராணுவ வீரர்கள் இடையேயான மோதலில் 20 இந்திய இராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும், சீன தரப்பில் பலத்த இழப்பு ஏற்பட்ட போதிலும், சீனா இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்புகளை வெளியிடவில்லை.
இந்திய – சீன எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றமானது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இருதரப்பு இராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இருந்தாலும், சீனா தனது படைகளை வாபஸ் பெறுவதாக கூறிவிட்டு, அமைதியாக தனது படையை எல்லையில் குவித்து வருகிறது.
கிழக்கு லடாக் பகுதியில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் இராணுவ தளபதி நரவனே அப்பகுதிக்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக ஆய்வு நடந்த இந்த பயணம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.