எனக்கு இரண்டாவது திருமணமா ? அதிர்ச்சியில் பிரபல நடிகர்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்திற்குப் பிரியமான இயக்குநர் சிவாவின் தம்பியும், பிரபல நடிகருமான பாலா எல்லோருக்கும் பரீட்சயமானவர்.

இவர் தமிழ் சினிமாக்களை விடவும் மலையாள படங்களில் அதிகம் நடித்துவருகிறார். தற்போது ஊரடங்கு நிலவுவதாக அவர் அங்கேயே தங்கிவிட்டார்.

இந்த நிலையில், மனைவியை விட்டு பிரிந்து வாழும் அவருக்கு ஒரு குழந்தை உள்ளது. சமீபத்தில் ஒரு செய்தி வெளியானது அதில் பாலா இரண்டாவது திருமண வாழ்க்கைக்கு தயாராகி விட்டார் என கூறப்பட்டது.

இதையடுத்து அவருக்குப் பலரும் போன் செய்து இதுகுறித்து விசாரிக்க தொடங்கிவிட்டனர். இதனால் நண்பர்கள்,. ரசிகர்கள் ,குடும்பத்தினர் என பலரும் இதுகுறித்து விசாரித்து வருவதால் தான் பெரிதும் வேதனை அடைந்துள்ளதாகவும், இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை என தெரிவித்துள்ளார்.