தெலுங்கு திரை உலகின் சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடத் திட்டம் !

தெலுங்கு திரை உலகின் சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவின் பிறந்தநாள் வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி வருகிறது. எனவே அவரது பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாட ராம் சரணின் ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர்.

தற்போது கொரொனா காலக்கட்டம் என்பதால் தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் உள்ள திரையுலகைச் சார்ந்துள்ள தொழிலாளர்களுக்கு உதவிகள் வழங்கவுள்ளதாக ராஷ்டிர ராம்சரண் யுவசக்தி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதில், திரையுலகு சார்ந்த தொழிலாளர்களுக்கு அரிசி, காய்கறி, நிதி உதவிகள் அளிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.