உடல் உறுப்புகளை தானம் செய்யும் நட்சத்திர தம்பதியர்!

சில வருடங்களுக்கு முன் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம்
பாய்ஸ்.இதில் ஹீரோயினாக அறிமுகமானவர் ஜெனிலியா.
அதன்பின் பல முன்னணி நடிகர்களுடன்
ஹிட் படங்களில் நடித்துப் புகழ் பெற்றவர் பாலிவுட்டிற்குச் சென்று அங்கும் பல படங்களில் நடித்து வந்தவர், பிரபல நடிகர் ரித்தேஷ் தேஸ்முக்கை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் நேற்று உலக மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டது. அப்பொது ரித்தேஷ் தேஸ்முக், அவரது மனைவி ஜெனிலியா இருவரும் உடல் உறுப்புகளை தானம் செய்யும் பத்திரத்தில் கையெழுத்திட்டனர்.
இதற்கு அவரது ரசிகர்கள் பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.