ஆன்லைன் வகுப்புகளுக்கு ஆப்பு வைத்த தமிழக அரசு..!!

கொரோனா வைரஸ் காரணமாக மாணவர்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இதனால், கல்வியிலிருந்து அவர்களுக்கு கவனச் சிதறல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, உயர் நீதிமன்றத்தில் தொலைக்காட்சி மூலம் கல்வி நிகழ்ச்சிகளை அளிக்க கோரி பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதன் விசாரணையை ஜூலை 6ஆம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்ட இந்திய மாணவர் சங்கம் தமிழக அரசு மாணவர்களின் கல்விக்காக பணி தொலைக்காட்சி சேனல் ஆரம்பிக்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு எதிரில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டவர்கள், “ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், நடப்பாண்டு கல்வி கட்டணங்களை பெற்றோர்களிடம் வசூலிக்கக்கூடாது. மாணவர்களின் உளவியல் நலன்கருதி ஐந்தாம் வகுப்பு வரை இருக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்த கூடாது. கட்டணம் வசூலிப்பதற்காக தனியார் பள்ளிகள் பலவும் சிறுபிள்ளைகளை கூட ஆன்லைன் வகுப்பு கவனிக்க கூறி கட்டாயப்படுத்துகின்றனர்.

பொருளாதார பாரபட்சமின்றி அனைத்து மாணவர்களும் கல்வி பெற வழிவகை செய்யும் வகையில், தமிழக அரசு கல்விக்காக தனி தொலைக்காட்சி சேனல் துவங்க வேண்டும். இதனை வலியுறுத்தி தான் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.” என்று தெரிவித்துள்ளனர்.