செல்போனில் வந்த தகவல், அழுது புரண்ட இளம்பெண்.! அப்பிடி என்ன வந்தது தெரியுமா ??

பொது இடத்தில் கொரோனா வைரஸ் உறுதியான தகவலை கேட்டு ஒருவர் கதறியழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றானது பாதித்து வருகின்றது. லட்சக்கணக்கான மக்களை இந்த வைரஸ் பலி வாங்கியுள்ளது. வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு விதங்களில் போராடி வருகின்றது. ஆனால், மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை. தொற்றும் குறைந்தபாடில்லை.

இந்நிலையில், சீனாவை சேர்ந்த ஒரு பெண் தனக்கு கொரோனா வைரஸ் பாசிட்டிவ் என்ற தகவலை செல்போனில் கேட்டுவிட்டு ஷாப்பிங் காம்ப்ளக்சில் கதறி அழுதுள்ளார். அந்த பெண் ஷாப்பிங் செய்து கொண்டிருந்தபோது, அவருக்கு திடீரென போன் வந்து கொரோணா பாசிட்டிவ் ரிசல்ட் என்று தெரிவித்துள்ளனர். இதனை கேட்ட அந்த பெண் கதறி தரையில் அழுது புரண்டு உள்ளார். அருகில் இருந்தவர்கள் அந்த பெண் விஷயம் தெரிந்து டக்கென விலகி தெரித்து ஓடி உள்ளனர்.

இதை பார்த்ததும் மேலும் அந்த பெண் கதறி அழ ஆரம்பித்துள்ளார். அழுது கொண்டிருந்தவரை சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்து மருத்துவமனை ஊழியர்கள் அழைத்துச் செல்கின்றனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக, “நீங்கள் சீக்கிரம் குணம் ஆயிடுவீங்க… தைரியமா இருங்க.. பயப்படாதீர்கள்..” என்று பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.