கொரோனா வைரஸ் இந்தியாவில் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தி கொண்டே வருகிறது. குறிப்பாக தமிழகத்தில், அதுவும் சென்னையில் தினமும் 1000க்கும் மேற்பட்ட புதிய கேஸ்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனை கட்டுப்படுத்த நம் தமிழக அரசு மீண்டும் முழு ஊரடங்கு பிறபித்துள்ளது.
இதற்கு முந்தைய ஊரடங்கில் திரையுலகை சேர்ந்த போஸ்ட் ப்ரொடுக்ஷன் வேலைகள், சின்னத்திரை சீரியல் படப்பிடிப்புகள் மற்றும் போஸ்ட் ப்ரோடுக்ஷன் வேலைகள் மிகவும் பாதுகாப்பான முறையில் நடைபெற்றது.
கொரோனா வைரஸின் தாக்கம் கொஞ்சம் கூட குறையாத காரணத்தினால் ஜூன் 19 முதல் மீண்டும் முழு ஊரடங்கு போடப்பட்டு சினிமா,சின்னத்திரை சீரியல் வேலைகள் அனைத்தையும் நிறுத்திவைப்பதாக FEFSI தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவித்தார்.
மேலும் ஜூலை 5 வரை இந்த தீவிர முழு ஊரடங்கு தொடரும் என்றும் அரசு அறிவித்துள்ளனர்.ஜூலை 6ஆம் தேதி முதல் கடந்தமுறை அறிவிக்கப்பட்ட தளர்வுகளுடன் ஊரடங்கு ஜூலை 31 வரை தொடரும் என்று தற்போது கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரசு ஜூலை 6ஆம் தேதி முதல் தளர்வுகளை அறிவித்துள்ளது, அதனை தொடர்ந்து ஜூலை 8ஆம் தேதி முதல் சின்னத்திரை சீரியல், விளம்பர படங்கள் உள்ளிட்ட ஷூட்டிங் தொடங்கலாம் என்று FEFSI முடிவெடுத்துள்ளது என்று ஆர்.கே. செல்வமணி தெரிவித்துள்ளார்.