நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு ஹாலிவுட் சினிமா வரை ரசிகர்கள் இருக்கிறார்கள். ஹிந்தியில் டாப் ஹீரோயினாகவும், அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்ந்தவர் ஹாலிவுட் சினிமா, தொலைக்காட்சி தொடரிலும் நடித்து வந்தார்.
அண்மையில் அமெரிக்கா பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டு பிரம்மாண்ட சொகுசு பங்களாவை வாங்கி அங்கேயே செட்டிலாகிவிட்டார்.
தற்போது கொரோனாவால் சினிமா படப்பிடிப்புகள் தடை செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ஓடிடி தளங்களில் வெளியாகும் வெப் தொடர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தற்போது சினிமா படங்களும் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் அமேசான் நிறுவனத்துடன் பல மில்லியன் டாலர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு பிரியங்கா இணைந்துள்ளாராம்.
இதன் மூலம் தொலைக்காட்சி தொடர், வெப் சீரிஸ், நடன நிகழ்ச்சி திட்டங்களில் ஈடுபட்டுள்ளாராம்.