பிரபல நடிகைகளுக்கு கட்சியில் முக்கிய பதவிகள்!

சினிமாவுக்கும் அரசியலுக்கு நீண்ட காலமாகவே ஒரு தொடர்பு இருந்து வருகிறது. தமிழ் சினிமா மட்டுமல்ல இந்தியா முழுக்க பல மாநிலங்களில் சினிமா பிரபலங்கள் அரசியலில் இணைந்து கட்சி பணியாற்றி, பதவியும் பெற்றிருக்கிறார்கள்.

இந்நிலையில் நடிகை நமீதா அண்மையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். தமிழில் பெரிதும் வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு பக்கமே திருமணமாகி செட்டிலாகிவிட்டார் நமீதா.

பாரதிய ஜனதா கட்சியின் தமிழக பிரிவில் நடிகை நமீதாவுக்கு மாநில செயற் குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளதாம்.

இவருடன் இக்கட்சியில் இணைந்த நடிகை குட்டி பத்மினி, நடிகை கவுதமி, செய்தி வாசிப்பாளர் சவுதா மணி ஆகியோருக்கும் மாநில செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளதாம்.