திரைப்படங்களின் திரைக்கதைக்கு ஏற்றவாறு தனக்கு கொடுக்கப்படும் சாவல்களான பல வித கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் தமிழ் நடிகர்கள்.
அதிலும் திருநங்கை கதாபாத்திரத்தில் தங்களது சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தி படங்களின் திரைக்கதைக்கு வலுசேர்க்கின்றனர் நம் தமிழ் நடிகர்கள்.
திருநங்கை கதாபாத்திரத்தில் முதன் முதலில் 2000-ஆம் ஆண்டு அப்பு என்கிற படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் நடித்து இதனை தமிழ் திரையில் தொடங்கியுள்ளார்.
இவரை தொடர்ந்து பல தமிழ் முன்னணி நடிகர்கள் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
அப்படி இதுவரை பிரகாஷ் ராஜில் எத்தனை பேர் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் என்று இங்கு பார்ப்போம்.
1. பிரகாஷ் ராஜ் – அப்பு
2. விக்ரம் – இருமுகன்
3. விஜய் சேதுபதி – சூப்பர் டீலக்ஸ்
4. ஜெயம் ரவி – ஆதி பகவன்
5. சரத்குமார் – காஞ்சனா
6. ராகவா லாரன்ஸ் – காஞ்சனா
7. விவேக் – முரட்டு காளை