தளபதி விஜய் பிகில் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்திருக்கும் திரைப்படம் மாஸ்டர்.
இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் செம ஹிட்டாகியுள்ளது. ஆனால் இப்படத்தின் ட்ரைலர் அல்லது டீசர் குறித்த அப்டேட் எதுவும் வெளியாகவில்லை.
மேலும் இப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 9 தேதி அன்றே வெளியாகவிருந்த நிலையில் கொரோனா வைரஸ் தோற்று காரணத்தினால் தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்தின் குறித்த தகவல் ஒன்று சமூகவலைத்தளத்தில் பரவி வருகிறது.
அது என்னவென்றால் கொரோனா வைரஸ் தோற்று கட்டுப்படுத்திவிட்டால் மாஸ்டர் திரைப்படம் வரும் தீபாவளி நவம்பர் 14 ல் வெளியாகும், மற்றும் ட்ரைலர் அக்டோபர் 25 ஆயுதபூஜை அன்று வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.
அப்படி நிலைமை கட்டுப்படாவிட்டால் மாஸ்டர் திரைப்படத்தின் வெளியிடு பொங்கலுக்கு தள்ளி போகும், மேலும் ட்ரைலர் கிறிஸ்துமஸ் டிசம்பர் 25ல் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.