இந்தியாவில் நபர் ஒருவர் தங்க மாஸ்குடன் வலம் வந்து கொண்டிருப்பது தான் இன்றைய வைரல் செய்தி.
உலக நாடுகளை கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மாஸ்க் அணிதல், தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்த்தல், அத்தியாவசிய வேலைகளுக்கு வெளியே சென்றாலும் கூட்டத்தை தவிர்த்து தனிமனித இடைவெளியை கடைபிடித்தல் போன்ற சில அடிப்படை விஷயங்களை பொதுமக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டுமென்று வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் மாஸ்க் என்பது அத்தியாவசிய ஒன்றாகிவிட்ட நிலையில் மகாராஷ்டிராவில் ஒருவர் தங்க மாஸ்க் தயாரித்து அதனை அணிந்து கொண்டு வலம் வருகிறார்.
புனே பகுதியைச் சேர்ந்த ஷங்கர் குரேட் என்பவரே தங்க மாஸ்குடன் வலம்வந்து கொண்டிருக்கிறார்.
சுமார் 2.89 லட்சம் மதிப்பில் இவர் அணிந்துள்ள மாஸ்கில் சிறிய சிறிய துளைகள் இருக்கின்றன, இதனால் சுவாசிப்பதில் தனக்கு எதுவும் பிரச்சனையில்லை எனக்கூறும் ஷங்கர், கொரோனாவிலிருந்து இது பாதுகாக்குமா என்றால் கேள்விக்குறிதான் என்கிறார்.
இச்செய்தி இணையத்தில் வைரலாக கொரோனா காலத்திலும் உங்கள்காட்டில் அடைமழை தான் போங்க, இது உங்களை பிரபலமாக்குமே தவிர கொரோனாவிலிருந்து பாதுகாக்காது என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Maharashtra: Shankar Kurade, a resident of Pimpri-Chinchwad of Pune district, has got himself a mask made of gold worth Rs 2.89 Lakhs. Says, "It's a thin mask with minute holes so that there's no difficulty in breathing. I'm not sure whether this mask will be effective." #COVID19 pic.twitter.com/JrbfI7iwS4
— ANI (@ANI) July 4, 2020