தளபதி விஜய் தமிழ் சினிமா கொண்டாடும் நாயகன். இவர் நடிப்பில் மாஸ்டர் படம் பிரமாண்டமாக உருவாகியுள்ளது.
இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக, படம் தீபாவளி விருந்தாக திரைக்கு கொண்டு வர முயற்சி நடந்து வருகிறது.
ஏற்கனவே படத்தின் பாடல்கள் அனைத்தும் பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகிறது.
அப்படியிருக்க தற்போது எல்லோரும் எதிர்ப்பார்ப்பது இப்படத்தின் ட்ரைலர் தான்.
சரி இது ஒரு புறம் இருக்க, விஜய்-யுவன் இதற்கு முன்பு புதிய கீதை படத்தில் மட்டுமே இணைந்து பணியாற்றினர்.
அதன் பிறகு இவர்கள் இணைந்து பணியாற்றியதே இல்லை, இவர்கள் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது அனைவரின் விருப்பமும்.
தற்போது யுவனிடம் விஜய் குறித்து கேள்வி, கேட்க அதற்கு அவர் என் இன்ஸ்பிரேஷன் என்று கூறியுள்ளார்.