மாஸ்டர் ட்ரைலர் இப்போது தான் வருகிறதா?

தளபதி விஜய் நடிப்பில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படம் மாஸ்டர். இப்படம் ஏப்ரல் மாதமே திரைக்கு வரவிருந்தது.

ஆனால், கொரோனா காரணமாக படத்தின் ரிலிஸ் தள்ளி சென்றது, தற்போது படம் தீபாவளிக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் விஜய்யுடன் மாளவிகா மோகனன் நடித்துள்ளார், ஆண்ட்ரியா ஒரு முக்கியமான ரோலில் நடித்துள்ளார்.

மேலும், இதில் கூடுதல் சிறப்பாக விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார், அதுவும் மிக கொடூர வில்லன் என அவரே தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்ப்பது மாஸ்டர் ட்ரைலர் தான்.

தற்போது நமக்கு கிடைத்த தகவல்படி மாஸ்டர் ட்ரைலர் ஆகஸ்ட் 15 ம் தேதி அல்லது அக்டோபர் 25 வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.