நடிகர் விஜய் மகன் சஞ்சய் தனது நண்பர்களுடன் இருக்கும் புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.
ஜேசன் சஞ்சய் திரைப்பட துறை தொடர்பாக கனடாவில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார் .
கொரோனா அச்சுறுத்தலால் விமானசேவைக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதை அடுத்து சஞ்சய் நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கனடாவில் கொரோனா தொற்று பாதிப்பு குறைவாக இருப்பதால் அங்கு சஞ்சய் பாதுகாப்பாக இருக்கிறார். தனது கல்லூரி நண்பர்களுடன் சஞ்சய் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை விஜய் ரசிகர்கள் சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.