நடிகர் ரஜினிக்காக கதையை மாற்றிய இயக்குனர்..!!

ரஜினி நடிக்க இருக்கும் அடுத்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

உலகநாயகன் கமலஹாசன் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள ஒரு திரைப்படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி கொண்டிருக்கின்றன. மாஸ்டர் படத்தை முடித்த பின்னர் அந்த கதைக்கான வேலைகளை தொடங்கினார் லோகேஷ் கனகராஜ். கதையை முடித்து அதை ரஜினியிடம் சொன்ன நிலையில் அந்த கதையில் ரஜினிக்கு முழுமையான திருப்தி இல்லை என சொல்லப்படுகிறது.

அந்த கதையில் ரஜினி சொன்ன மாற்றங்களை செய்யவும் லோகேஷ் விருப்பமில்லை எனக் கூறியதால் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் இப்போது ஊரடங்கு நேரத்தில் அந்த கதையில் மாற்றங்களை செய்து மீண்டும் ரஜினியிடம் சொல்லியுள்ளார் லோகேஷ் கனகராஜ். இப்போது ரஜினிக்கு கதையில் திருப்தி ஏற்பட அந்த கதையில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை கமல் தயாரிப்பதும் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.