பிரபல நடிகர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார்?

நடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக நேற்று நள்ளிரவு வெளியான மர்ம தொலைபேசி அழைப்பு ஒன்றால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகர் விஜய் தற்போது பனையூரில் உள்ள பங்களாவில் வசித்து வந்தாலும் அவருக்கு சாலிகிராமத்தில் இன்னொரு வீடு உள்ளது. சாலிகிராமத்தில் உள்ள அந்த வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம தொலைபேசி அழைப்பு ஒன்று காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு வந்தது

இதனையடுத்து காவல்துறையினர் விரைந்து சென்று சாலிகிராமத்தில் உள்ள விஜய் வீட்டை சோதனை நடத்தினர். ஆனால் சோதனையின் முடிவில் அந்த தொலைபேசி அழைப்பு வெறும் புரளி என்பது உறுதிசெய்யப்பட்டது

இதனை அடுத்து விசாரணையில் இறங்கிய போலீசார் மிரட்டல் தொலைபேசி அழைப்பு விடுத்தவர் விழுப்புரத்தை சேர்ந்தவர் என்றும் அவர் மனநிலை சரியில்லாதவர் என்பதையும் கண்டுபிடித்தனர். இதனையடுத்து அவரது குடும்பத்தினரிடம் எச்சரிக்கை விடுத்த போலீசார், இனிமேல் இதுபோல் நடக்காமல் பார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது