இந்திய – சீனா தாக்குதல் திரைப்படம் ஆகிறது..!!!

சமீபத்தில் இந்திய –சீனா எல்லைப் பகுதியும் இந்தியாவுக்குச் சொந்தமான கல்வன் பள்ளத்தில் சீன ராணுவம் அத்துமீறித் தாக்குதல் நடத்தியது. இதில் இந்திய ராணுவம் பதிலடி கொடுத்ததில் பின் வாங்கியது. இந்த தாக்குதலில் 20இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தானர்.

இந்நிலையில் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் பிரதமர் மோடி நேற்று கல்வான் பகுதிக்குச் சென்றார். அங்குள்ள, நம் நாட்டை காக்கும் ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றினார். வீரர்களையும் பார்த்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
இந்த நிலையில் இந்திய ராணுவவீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்ததை மையப்படுத்தி பாலிவுட்ட்டில் திரைப்படம் எடுக்கப்படும் என நடிகர் அஜ்ய் தேவ்கான் அறிவித்துள்ளார்.