கார்த்தி நடித்த சிறுத்தை என்ற படத்தை இயக்கி தனக்கென்று தனி இடத்தை தமிழ் திரையுலகில் முத்திரை பதித்தார் இயக்குனர் சிவா.
இதன்பின் தல அஜித்துடன் தொடர்ந்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசன் என நான்கு படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வளம் வந்துகொண்டு இருக்கிறார்.
மேலும் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை வைத்து அண்ணாத்த எனும் படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில் இவர் அண்ணாத்த படத்திற்கு பிறகு மூன்று முன்னணி நடிகர்களை வைத்து படங்கள் எடுக்க போகிறாராம் சிறுத்தை சிவா.
ஆம் தளபதி விஜய்யிடம் ஒரு கதை சொல்லி ஒகே செய்துள்ளாராம். இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க போகிறார்களாம்.
மேலும் சூர்யாவுடன் ஒரு படம் மற்றும் விக்ரமுடன் ஒரு படமும் கமிட் செய்து வைத்துள்ளாராம் சிவா.
இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று அறிந்துகொள்ள, இந்த மூன்று படங்களை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் வரை காத்திருந்து பார்ப்போம்.