தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் கொண்டவராக இருந்தவர் கமல். ஆனால், இவரின் தீவிர அரசியல் திரைப்பயணத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.
இவர் நடிப்பில் கடைசியாக வந்த தூங்காவனம், விஸ்வரூபம் 2 ஆகிய படங்கள் படுதோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் கமல் திரைப்பயணத்தில் பலரும் அதிகம் வசூல் செய்த படம் விஸ்வரூபம் தான் என்று நினைத்தனர்.
ஆனால், உண்மை என்னவென்றால் தசாவதாரம் தான் கமல் திரைப்பயணத்தில் அதிகம் வசூல் செய்த படமாம்.
அதன் பிறகு எந்த படமும் கமலின் திரைப்பயணத்தில் இத்தகைய வசூலை தரவில்லை என கூறப்படுகிறது.
இத்தனை படம் நடித்தும் கமல் படங்களின் வசூல் இவ்வளவு குறைந்தது அவருடைய ரசிகர்களுக்கு வருத்தம் தான்.
ஆனால், கமல் தற்போது இந்தியன் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.
இப்படம் கண்டிப்பாக மிகப்பெரிய வசூலை செய்யும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது.