தமிழ் திரையுலகில் என்றும் நம்பர் 1 சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் தலைவர் ரஜினிகாந்த்.
இவர் கடைசியாக நடித்த வெளிவந்த படம் தர்பார். இப்படத்தை முன்னணி இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வெளிவந்தது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தன்னை தயாரிப்பாளர் ஒருவர் நடிக்க வரசொல்லி, அதன்பின் சம்பளம் தராமல் அவமானப்படுத்திய கதை ஒன்றை ரஜினி கூறினார்.
அப்படி சூப்பர் ஸ்டாரை அவமப்படுத்திய அந்த தயாரிப்பார் யார் என்று ரசிகர்களிடம் பல கேள்விகள் எழுந்து வந்தன.
இந்நிலையில் அந்த தயாரிப்பாளர் யார் என்று தெரியவந்துள்ளது.
ஆம் திரு. டி. என். பாலு தான் அந்த தயாரிப்பாளர் என்று தற்போது தெரியவந்துள்ளது. நடிகர் கமல்ஹாசன், ஸ்ரீபிரியா நடிப்பில் வெளிவந்த சட்டம் என் கையில் என்ற படத்திற்காக தான் ரஜினியை நடிக்க அழைத்துள்ளார். அந்த படத்தின் படப்பிடிப்பு போது தான் ரஜினிகாந்த் அவமப்படுத்தி வெளி ஏறினார்.
மேலும் ரஜினிகாந்த் நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் அதன்பின் சத்யராஜ் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.