பிரபல தமிழ் நடிகையை தொடர்ந்து அவருடன் நடித்த ஹீரோவுக்கும் கொரோனா

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வாணி ராணி சீரியலில் பூஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை நவ்யா சுவாமி.

தெலுங்கு நடிகையான இவருக்கு சில நாட்களுக்கு முன்னர் கொரோனா இருப்பது உறுதியானது.

முடிவுகள் பாசிட்டிவ் என வந்ததும், இன்ஸ்டாவில் வீடியோவை வெளியிட்ட நவ்யா, கொரோனா என தெரிந்ததும் அன்றிரவு முழுவதும் அழுததாகவும், கொரோனா பரப்பும் நோயாளியாக தான் இருந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்ததாகவும் தெரிவித்தார்.

தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ள நிலையில் தற்போது உடல்நலம் தேறி வருவதாகவும் அறிவித்தார்.

இந்நிலையில் நா பேரு மீனாட்சி என்ற சீரியலில் இவருடன் நடித்த நடிகர் ரவி கிருஷ்ணாவுக்கு கொரோனா இருப்பது உறுதியானது.

இதுகுறித்து தனது ட்விட்டர் தெரிவித்துள்ள அவர், எனக்கு கொரோனா இருப்பதாக வந்த செய்தி உண்மைதான். கடந்த 3 நாட்களாக என்னை நானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன்.

கடவுள் புண்ணியத்தில் நான் இப்போது நன்றாக இருக்கிறேன். மேலும், என்னுடன் இருந்தவர்கள் அனைவரும் தயவு செய்து ஒரு பரிசோதனையை எடுத்துக் கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.