தளபதி விஜய்யின் மிக பெரிய தோல்வி படங்களின் பாக்ஸ் ஆபிஸ் ரிபோர்ட்..!!

தற்போதைய தமிழ் சினிமாவின் நம்பர் 1 பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றால் அது தளபதி விஜய் அவர்கள் தான்.

ஆம் இவர் கடைசியாக நடித்த மூன்று படங்களுமே 250 கோடிக்கு மேல் பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்து மாபெரும் சாதனையை படைத்துள்ளது.

அதுவும் இவர் அட்லீ இயக்கத்தில், ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கடைசியாக நடித்த வெளிவந்த பிகில் படம் ரு 300 கோடி வசூல் செய்து வெற்றியடைந்தது.

இந்நிலையில் இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து முடித்து வெளிவர காத்திருக்கும் மாஸ்டர் படத்தின் வசூல் வேட்டைக்காக தான் பல கோடி ரசிகர்கள் காத்து கொண்டு இருக்கிறார்கள்.

நடிகர் விஜய் தனது திரைப்பயணத்தில் சில நேரங்களில் தனது தவறான முடிவுகளால் சில தோல்வி படங்களை கொடுத்துள்ளார்.

அப்படி அவர் நடித்து மிக பெரிய தோல்வியடைந்த படங்களின் பாக்ஸ் ஆபிஸ் ரிபோர்ட் என்வென்று இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

1. சுறா – 10 கோடி

2. வில்லு – 40 கோடி

3. புலி – 80 கோடி

4. தலைவா – 83 கோடி