ட்ராப் ஆனதா சூர்யாவின் அருவா படம் ?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், சமூகத்தில் மிகவும் அக்கறை கொண்ட ஒரு நடிகராகவும் இருந்து வருபவர் நடிகர் சூர்யா.

இவர் தற்போது சுதா கே பிரசாத் அவர்களின் இயக்கத்தில் சூரரை போற்று படத்தில் நடித்து முடித்துவிட்டு அப்படத்தின் ரீலிசிற்காக காத்துக்கொண்டு இருக்கிறார்.

மேலும் இதனை தொடர்ந்து வாடிவாசல், அருவா என உள்ளிட்ட படங்களில் கமிட்டகியுள்ளர் சூர்யா.

இந்நிலையில் ஹரி இயக்கத்தில் இவர் கூடிய விரைவில் நடிக்கவுள்ள படம் தான் அருவா. இதனை குறித்து சில மாதங்களுக்கு முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை இப்படத்தின் தயாரிப்பாளர் நிறுவனம் வெளியிட்டு இருந்தது.

ஆனால் தற்போது இப்படம் ட்ராப் செய்ப்பட்டு கைவிடப்பட்டுள்ளது என சமூக வலைதளங்களில் பேசுபட்டு வருகிறது.

இந்நிலையில் இவை அனைந்தும் வதந்தி மட்டும் என தெரியவந்துள்ளது. அருவா படம் கைவிடப்பட வில்லை என்றும் படத்தின் படப்பிடிப்பு கொஞ்சம் தாமதமாக துவங்கும் என்றும் கூறுகின்றனர்.