அண்மையில் நடிகர் விஷாலின் படத் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்த பெண் கணக்காளர் ரம்யா கொஞ்சம் கொஞ்சமாக ரூ 45 லட்சம் வரை பணத்தை கையாடல் செய்திருப்பதாக சென்னை வடபழனி காவல் நிலையத்தில் அந்நிறுவனத்தின் மேலாளர் ஹரி புகார் அளித்திருந்தார்.
இதனால் சென்னை விருகம்பாக்கம் போலிசார் விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் ரம்யா ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.
இதில் தனக்கும் தன் குடும்பத்தின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது, ஹரியின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர், பணத்தை நான் கையாடல் செய்யவில்லை, பொது இடத்தில் கணக்கை ஒப்படைக்க தயார் என கூறியுள்ளார்.
ஆனால் மேலாளர் ஹரி, ரம்யா பணத்தை கையாடல் செய்ததை ஒப்புக்கொண்டதாகவும், காவல் நிலையத்திற்கு வந்த சமரசம் செய்துகொள்ளலாம் என்றும் கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.