தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளாக முன்னணி நடிகர் எனும் அந்தஸ்தில் இருந்து வருபர் தல அஜித் குமார்.
இவர் திரைப்பயணத்தில் பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. ஆனால் இவரின் 50 வது படமான மங்காத்தா படத்தை எழிதலவில் யாராலும் மறந்துவிட முடியாது.
இப்படத்தின் மூலமாக தான் மகத் எனும் இளம் நடிகர் தமிழ் ரசிகர்களுக்கு பிரபலமானார். இதன்பின் விஜய் நடித்து வெளிவந்த ஜில்லா படத்திலும் நடித்து தனக்கென்று தனி இடத்தை பெற்றுக்கொண்டார்.
இதனை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 2 வில் கலந்து கொண்டார். தற்போது இவர் கைவசம் இருக்கும் 2 படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தல அஜித் தனக்கு கூறிய சில அறிவுரைகளை பரிந்துள்ளர்.
இதில் அவர் கூறியது :
” அப்போது நானும் உன்னை போல் சுட்டிப் பையனாக தான் சினிமாவுக்குள் நுழைத்தேன். ஆனால் தற்போது நிறைய அனுபவங்களை சினிமா எனக்கு கற்றுக் கொடுத்துவிட்டது.
அதே போல் நீயும் என்னுடைய நிலைமைக்கு வரும்போது தெரிந்து கொள்வாய் என கூறினாராம்.
தல அஜித்துடன் நடிக்க எனக்கு மிகவும் பதட்டம் அடைந்த போது இந்த வார்த்தைகளைக் கூறி அவர் என்னை உற்சாகம் அடைய வைத்தார்.
மேலும் சினிமாவுக்கு வந்து 10 வருடங்கள் ஆகியும் இன்னும் எதுவும் என்னால் சாதிக்க முடியாமல் என நினைக்கும் பொழுது. தல அஜித்தின் ஒவ்வொரு வார்த்தைகளும் தனது உத்வேகம் அளித்து கொண்டிருக்கிறது, நான் சினிமாவில் இருப்பதற்கு மிக முக்கியமான ஒரு காரணமும் அஜித் தான் ” என மகத் மனம் திறந்து வெளிப்படையாக கூறினார்.