பிரபல நடிகர்கள் மிஸ் செய்து பின்னர் மற்ற நடிகர்கள் நடித்து பிளாக் பஸ்டர் அடித்த திரைப்படங்களின் லிஸ்ட், இதோ..

சினிமாத்துறையில் பிரபல நடிகர்கள் நல்ல திரைப்படங்களை மிஸ் பண்ணுவது வழக்கமாக நடந்து வரும் விஷயம்.

அப்படி அந்த நடிகர்களால் தவிர்க்கப்பட்டோ அல்லது நிராகரிக்கப்பட்டு, மற்ற நடிகர்கள் நடிப்பில் வெளியாகி பெரிய காண்பதும் உண்டு.

அந்த வகையில் நாம் தற்போது பார்க்கவுள்ள லிஸ்ட் அது தான்.

1. சிவந்தமண் – எம். ஜி. ஆர் அவர்களால் நிராகரிக்கப்பட்டு பின் சிவாஜி நடிப்பில் வெளியானது.

2. எந்திரன் – நடிகர் கமலால் கைவிடப்பட்டு பின் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியானது.

3. முதல்வன் – ரஜினி மற்றும் விஜய்யால் தவிர்க்கப்பட்டு பின் அர்ஜுன் நடித்தார்.

4. கஜினி – நடிகர் அஜித்தால் கைவிடப்பட்டு பின் சூர்யா நடித்து வெளியானது.

5. கோ – நடிகர் சிம்பு கடைசி நிமிஷத்தில் பின்வாங்க, ஜீவா நடித்து வெற்றியடைந்தது.

6. நான் கடவுள் – நடிகர் வெளியேறிய பின் நடிகர் ஆர்யாவை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம்.

7. தீனா – நடிகர் விஜய்யால் நிராகரிக்கப்பட்டு, தல அஜித் நடித்து வெற்றி கண்டது.

8. நியூ – நடிகர் அஜித் மறுத்ததால், எஸ். ஜே. சூர்யா ஹீரோவாக அறிமுகமானார்.

9. சண்டக்கோழி – நடிகர் விஜய் நிராகரித்து, விஷால் நடிப்பில் வெளியானது.

10. தனி ஒருவன் – சித்தார்த் அபிமன்யு கதாபாத்திரத்தை நடிகர் மாதவன் மறுக்க, பின் அரவிந்த் சாமி நடித்தார்.