சுஷாந்த் மரணத்தில் திடுக்கிட வைத்த தகவல்! கர்ப்பமான பெண் தற்கொலை!

கடந்த சில தினங்களுக்கு முன் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அவரின் மன அழுத்தத்தில் இப்படி ஒரு முடிவு எடுத்துவந்தாக பேசப்பட்டு வந்த நிலையில் இன்னும் மர்மம் நீடிக்கிறது.

மேலும் சுஷாந்தின் முன்னாள் மேனேஜர் திஷா சாலியன் என்ற பெண் மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டார். அவருடன் அவரின் வருங்கால கணவரும் இருந்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் திஷா தற்கொலை செய்துகொண்ட போது கர்ப்பமாக இருந்ததாகவும், அவரின் கர்ப்பத்திற்கு நடிகர் சூரஜ் பஞ்சாலி தான் காரணம் என்றும் இவ்விசயம் சுஷாந்திற்கு தெரியும் என்று சரியான நேரத்தில் இதை வெளியே சொல்ல இருந்ததாகவும், ஆனால் சுஷாந்தை சூரஜ் மிரட்டியதாகவும், இதனாலேயே சுஷாந்த் தற்கொலை செய்துகொண்டார் என்றும் சொல்லப்பட்டது.

இதனால் சூரஜ் அண்மையில் அளித்துள்ள பேட்டியில் திஷா யார் என்றே தெரியாது, அவரின் தற்கொலைக்கு பின்னர் தான் அவர் யார் என தெரியும், நான் இதுவரை அவரை பார்த்ததே இல்லை, சுஷாந்திற்கும் எனக்கும் எவ்விதமான பிரச்சனையும் இல்லை என கூறியுள்ளார்.