உலகம் முழுக்க கொரோனா வைரஸ் நோய் தொற்று 1.13 கோடியை தாண்டிவிட்டது. இந்தியாவிலும் 6.73 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 19 ஆயிரம் பேர் இவ்வைரஸ் தாக்குதால் இறந்துள்ளனர்.
சினிமா பிரபலங்கள் சிலருக்கும் இந்நோய் தொற்று ஏற்பட்டு குணமடைந்து வருகின்றனர். இந்நிலையில் கன்னட சினிமாவின் பிரபல நடிகரும், மறைந்த எம்.பியுமான அம்பரீஷின் மனைவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாம்.
கடந்த ஜூலை 4 ம் தேதியே லேசான தலைவலி, தொண்டை எரிச்சல் இருந்தபோதே தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் தொற்று பாசிட்டிவ் என வந்துள்ளதாம்.
இதனால் அவர் வீட்டில் இருந்தபடியே கொரோனா சிகிச்சை எடுத்து வருகிறாராம். அனைவரும் முன்னெச்சரிக்கையுடனும், கவனமுடன், பாதுகாப்பாக இருக்க வேண்டும், இது போன்ற முன் அறிகுறிகளை உணர்ந்தால் உடனே பரிசோதனை செய்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.