ஜாதகத்துல நம்பிக்கை இல்லன்னாலும் பராவாயில்ல.. செவ்வாய் பொருத்தம் பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்.!

“சுத்த ஜாதகமா இருந்தா இந்நேரம் பொருத்தம் வந்திருக்கும், செவ்வாய் இருக்கு, கொஞ்சம் லோட்டா தான் அமையும்” என்று ஜாதகம் பார்க்க போன இடத்தில் சொல்லி அனுப்பி வைத்தார்கள். இப்படியே பல வருஷம் தள்ளிப்போச்சு, செவ்வாய் இருக்க பசங்களுக்கு, பெண்களுக்கு பொருந்தக்கூடிய வரன் தேடி கண்டுபிடிப்பதற்குள், பெத்தவங்களுக்கு சீ! சீ! என்று ஆகிவிடும். ஒரு சிலருக்கு அதிர்ஷ்டவசமாக எடுத்த எடுப்பிலேயே பொருந்தி வந்தாலும், இன்னும் பலருக்கு குதிரை கொம்பு தான்.

சரி செவ்வாய் உள்ள வரனுக்கு, செவ்வாய் உள்ள வரன் மட்டும் தான் பார்க்க வேண்டுமா.? ஏன் சுத்த ஜாதகம் கொண்ட வரனை கல்யாணம் செய்து வைக்கக்கூடாதா என்று படித்தவர்கள் கேள்வி கேட்கலாம். அதற்கு ஜோதிடமும், கொஞ்சம் அறிவியலும் கலந்த மாதிரி பதில் சொல்கிறார் ஜோதிடர். செவ்வாய் கிரகம் இரத்தத்தை குறிக்கிறதாம். நமக்கே தெரியும், அறிவியல் ரீதியாக பல இரத்த வகைகள் இருக்கு என்பது. அதன்படி, இந்த வகை இரத்தம் கொண்டவர்கள், அதனுடன் இணையக்கூடிய இரத்தவகை கொண்டவர்களைத் தான் திருமணம் செய்துகொள்ள வேண்டுமாம்.

மாறி செய்யும் போது, பிறக்கும் குழந்தைக்கு அது ஆபத்தாக மாறுவதோடு, சிலருக்கு குழந்தை பாக்கியமும் இல்லாமல் போகிறது. ஒரு சில தம்பதிகள் வயிற்றில் கரு தங்குவதே இல்லை, பலமுறை அபார்ஷன் ஆயிருக்கு என்று சொல்வதை கேட்டிருப்போம். அதற்கெல்லாம் காரணம் இது தான். இணைய வேண்டிய இரத்த வகையுடன், இணைந்தால் மட்டுமே ஆரோக்கியமான குழந்தை பிறக்கும். எதையும் பார்க்காமல் திருமணம் செய்து வைத்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் தள்ளிப்போகிறது.

இவையெல்லாம் அறிவியல் ரீதியாக ஆய்வு செய்து நிரூபிக்கப்படவில்லை என்றாலும், பின்னணியில் உள்ள காரணம் இதுவே. அப்படி எனக்கு இந்த செவ்வாய் தோஷம் என்பதில் எல்லாம் நம்பிக்கை கிடையாது என்றால், ரத்தவகை அறிந்து திருமணம் செய்துகொள்ளுங்கள். பொதுவாக மருத்துவரிடம் சென்று கேட்டாலே, இது குறித்த தகவல்களை சொல்வார்கள். நமக்கு ஏற்ற ரத்தவகை கொண்டவரை திருமணம் முடித்து, எவ்வித குறையும் இல்லாமல் வாழலாம்.