பாகற்காய் ஊறுகாய் செய்வது எப்படி?..

நம் அனைவருக்கும் பாகற்காய் என்றாலே கசப்பு மட்டும்தான் ஞாபகம் வரும். ஆனால் பாகற்காயில் பலவிதமான சுவையான ரெசிபிக்களை செய்யலாம். அந்த வகையில் இன்று பாகற்காயை வைத்து சூப்பரான ஊறுகாய் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம். இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.

தேவையான பொருட்கள்:

பாகற்காய் – 200 கிராம்

மிளகாய் தூள் – காரத்திற்கு ஏற்ப

பெருங்காய் தூள் -1 ஸ்பூன்

வெந்தைய தூள் – 2 ஸ்பூன்

கடுகு – 1 ஸ்பூன்

நல்லெண்ணெய் – 100 கிராம்

கல் உப்பு – சுவைக்கேற்ப

எலும்மிச்சை பழச்சாறு – தேவையான அளவு

செய்யும் முறை:

பாகற்காயை நன்றாக கழுவி நீரை வடித்து எடுத்துக் கொள்ளவும் . பின்னர் சிறிது சிறிதாக நறுக்கி உள்ளிருக்கும் விதைகளை நீக்கி விட்டு பொடிப்பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். அதில் கல் உப்பை சேர்த்து நன்றாக பிசைந்து வைத்துக்கொள்ளவும்.

இந்த கலவையை சரியாக  ஒரு நாள் வரை மூடி போட்டு வைத்து விட வேண்டும். கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்தல் மிக நல்லது. மறுநாள், வாணலியில் இரும்பு பாத்திரத்தை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும், அதில் கடுகை போட்டு பொரிய விட வேண்டும்.

அத்துடன் பெருங்காய தூள், வெந்தய தூள் இவற்றை போட்டு பொரிந்ததும் அதில் மிளகாய் தூள் போட வேண்டும். மிளகாய்த்தூள் போட்ட மறு நிமிடமே உப்பில் ஊற வைத்துள்ள பாகற்காயை போட்டு சில நிமிடம் நன்றாக வதக்கவும்.

பாகற்காய் ஒரு அளவு வதங்கியதும், அதில் வினிகரை அல்லது எலும்பிச்சை பழத்தின் சாற்றை சேர்க்கவும். இது நன்றாக வற்றும் வரை கிளறிவிட வேண்டும். அதன்பின்னர் எண்ணெய் ஊறுகாயில் இருந்து பிரிந்து வரும் வரை கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். ஊறுகாய் பதத்திற்கு வந்ததும், அதனை ஆறவைத்து  கண்ணாடி பாட்டிலில் போட்டு வைக்க வேண்டும்.  இப்போது சுவையான சூப்பரான பாகற்காய் ஊறுகாய் ரெடி.