துளி கூட இரக்கம் இல்லாது, பசுவினை தாக்கிய கொடூரம்..!!

தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் உள்ள ஜெயஹிந்த்புரம் பகுதியை சார்ந்தவர் முத்துக்கனி. இவர் இதே பகுதியில் சொந்தமாக பத்திற்கும் மேற்பட்ட பசுக்களை வளர்த்து வருகிறார். இந்த நிலையில், நேற்று தனது வீட்டு வாயிலில் கட்டி வைத்திருந்த பசு நீண்ட நேரமாக கத்திக்கொண்டு இருந்துள்ளது.

பசுமாடு தொடர்ந்து சப்தம் எழுப்பிக்கொண்டே இருந்ததால் ஆத்திரமடைந்த முத்துகனி, அங்கிருந்த கட்டையை எடுத்து பசுவினை மனிதாபிமானம் இல்லாது கொடூரமாக தாக்கியுள்ளான். இதனால் படுகாயமடைந்து அலறித்துடித்த மாடு, சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தது.

இந்த விஷயத்தை அப்பகுதியினர் விடியோவாக பதிவு செய்த நிலையில், இது குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. மேலும், இந்த விஷயம் தொடர்பாக அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு முத்துக்கனியை கைது செய்தனர். மேலும், பசுமாட்டிற்கு சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.