எலுமிச்சைனு இதுக்கு பேரு வர இது தான் காரணமா.?!

எல்லா காலத்திலும் கிடைக்கக்கூடிய, மிக அதிக அளவு நன்மை கொண்ட பழங்களில் ஒன்று எலுமிச்சை. இதை நாம் கிருமி நாசினியாகவும் பயன்படுத்துவோம்.

இதில் கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் சி ஆகியவை அதிக அளவில் நிறைந்திருக்கிறது என்பது நமக்கு நன்கு தெரிந்தது தான். ஆனால் எலுமிச்சை பற்றி நமக்குத் தெரியாத சுவாரஸ்யமான கதை ஒன்னு இருக்கு…அத கேட்டா சை… இத்தனை நாள் இத தெரியாம இருந்திருக்கோமேன்னு ஆச்சர்யப்படுவீங்க…

எலுமிச்சை பல விஷயங்களுக்குப் பயன்படுத்தப்படுவது. இது காயாக இருக்கும்போதும் சரி, கனிந்த பின்னும் சரி சுவையில் மாற்றமில்லாத ஒரே கனி இதுதான். அதனால் இதற்கு எப்போதுமே சிறப்பு உண்டு.அதனாலேயே எலுமிச்சைக்கு தேவக்கனி, ராஜக்கனி என்றெல்லாம் பல பெயர்கள் உண்டு.

ஆனால், இதற்கு ஏன் இப்படி பெயர் வந்தது என்ற காரணம் தான், நம்முடைய முன்னோர்களின் அறிவுத்திறனைப் பார்த்து வியக்க வைக்கிறது.

மற்ற எல்லா பழங்களையும் எலி கடித்துவிடும். எலுமிச்சையை மட்டும் எலி தொடவே தொடாது.எலி மிச்சம் வைத்ததால் தான் இது எலிமிச்சம் என்று பெயர் வந்தது.அதன்பின் அது மருவி எலிமிச்சை, எலுமிச்சை என்று வழக்கத்துக்கு வந்தது.