இருமலை, சளி தொல்லை நீக்க உதவும் மருத்தவ டீ!

திமதுரம் டீ தொண்டை வலி மற்றும் புண்ணை ஆற்ற உதவும். சளியையும் போக்கும். இன்று இந்த டீயை தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

அதிமதுரம் தூள் – 1 டீஸ்பூன்
நாட்டு சர்க்கரை – தேவையான அளவு
தண்ணீர் – 1 டம்ளர்

செய்முறை:

அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட வேண்டும்.

அதனுள் அதிமதுரம் தூளை தூவி இரண்டு நிமிடங்கள் கொதிக்கவிட வேண்டும்.

கொதிக்க தொடங்கியதும் நாட்டு சர்க்கரையை கொட்ட வேண்டும்.

அது கரைந்ததும் இறக்கி வடிகட்டி பருகலாம்.

இது தொண்டை வலி மற்றும் புண்ணை ஆற்ற உதவும். சளியையும் போக்கும்.