சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மக்கள் இசை பாடகியாக அறிமுகமாகி இறுதியில் தன் கணவர் செந்திலை போட்டி நிகழ்ச்சியின் வெற்றியாளாரக்கியவர் ராஜலெட்சுமி.
இருவரும் இணைந்து கிராமிய இசைபாடல்களை மேடைகளிலும், சினிமாக்களிலும் பாடி வந்த இவர்களின் வாழ்க்கை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியால் மாறிவிட்டது எனலாம்.
சினிமா பட வாய்ப்புகளும் கிடைத்து பாடி வர ஜோடியாக இருவரும் பாடிய என்ன மச்சான் பாடல் பட்டிதொட்டி எங்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்துவிட்டது.
கொரோனாவால் வீட்டில் முடங்கியிருக்கும் இவர்கள் அண்மையில் சுருக்கமாக தங்கள் கனவு இல்லத்தின் கிரகப்பிரவேசத்தினை நடத்தி முடித்தனர்.
இந்நிலையில் ராஜலெட்சுமி மணமகள் போல அலங்காரம் செய்து போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.