லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன்?

மாநகரம் எனும் படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் திரையுலக இயக்குனர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்தது லோகேஷ் கனகராஜ்.

இதன்பின் முன்னணி நடிகர் கார்த்தியுடன் இணைந்து கைதி எனும் பிரமாண்ட படத்தை இயக்கி மாபெரும் வெற்றியை தமிழ் திரையுலகிற்கு தேடி தந்தவர் லோகேஷ்.

இதனை தொடர்ந்து சற்றும் யாருமே எதிர்பாராத விதத்தில் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் தளபதி விஜய்யுடன் இணைந்து மாஸ்டர் படத்தை இயக்கி முடித்துள்ளார்.

மேலும் தமிழ் திரையுலக ரசிகர்கள் அனைவரும் காத்து கொண்டு இருக்கும் விஷயம் இப்படத்தின் ரிலீஸ் தான்.

இந்நிலையில் சமீபத்தில் கமல் ஹாசன் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்க வுள்ளர் என 90% சதவீத உறுதியான தகவல் வெளிவந்து.

இந்நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் கமல் ஹாசன் அவர்களை வைத்து புதிதாக ஒரு படத்தை இயக்கவுள்ளராம் என சில தகவல்கள் கூறப்பட்டு வருகிறது.

ஆனால் இதனை குறித்து அதிகாரப்பூர்வ தகவலை கமல் ஹாசன் தான் வெளியிடவேண்டும் என்று அனைவராலும் அதிற்பார்க்கப் படுகிறது.