தமிழ் சினிமாவை பொறுத்தவரை பட்டங்கள் என்பது படித்து வாங்கும் டிகிரியை விட பெரிய விஷயம். நாளைக்கு நடிக்க வரும் நடிகர் கூட, சோலார் ஸ்டார், பவர் எஞ்சின் ஸ்டார் என்று பட்டங்களுடன் தான் வருகின்றனர்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடங்களாக முதலிடத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.
இவரின் பட்டத்திற்கு தான் விவேக் சொல்வது போல் விடலைப்பையனில் இருந்து, சுள்ளான் வரை ஆசைப்பட்டு வருகின்றனர்.
ஆனால், அஜித்தோ, விஜய்யோ தங்களுக்கு அந்த இடம் வேண்டும், ஆனால், அந்த பட்டம் வேண்டாம் என தல தளபதி என்று தங்களுக்குள் ஒரு பட்டங்களை பிரித்துவிட்டனர்.
ஆனால், தற்போது அதற்கும் போட்டி வந்துவிட்டது, ஆம், தளபதி பட்டமே விஜய்யுடையது இல்லை, சரவணனுடைய இளைய தளபதி தான் அது, தளபதி ஸ்டாலின் பட்டம் என்று அஜித் ரசிகர்கள் கிண்டலடித்தனர்.
அதை தொடர்ந்து விஜய் ரசிகர்கள் சும்மா இருப்பார்களா? நீண்ட நாள் காத்திருந்து தோனிக்கு சென்னை சூப்பர் கிங்கிஸில் தல தோனி என்று சொல்ல, உடனே விஜய் ரசிகர்கள் தோனியை தல என்று சொல்லி தங்கள் ஆசையை தீர்த்துக்கொண்டனர்.
ஆனால், தோனி ஒரு நேஷ்னல் ஐகான் என்பதால் அந்த பெயர் இந்தியா முழுவதும் பரவ ஆரம்பித்தது. இதி அஜித் ரசிகர்களிடம் கொஞ்சம் கோபத்தை ஏற்றியது.
பிறகு வருடா தோறும் தோனி பிறந்தநாளுக்கு தல தோனி என்று ட்ரெண்ட் செய்து அஜித் ரசிகர்களை வெறுப்பேற்ற, அஜித் ரசிகர்கள் நேற்று தல பட்டம் எங்களுக்கு தான் அது நாங்க ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியில் வாங்கியது என்ற ரேஞ்சில் ரியல் ப்ராண்ட் தல அஜித் என ட்ரெண்ட் செய்தனர்.
இப்படி விஜய், அஜித் ரசிகர்கள் புது ரூட்டில் தங்கள் வன்மத்தை தீர்க்க, இப்போது ரியல் தல யார் என்பது தான் பலரின் கேள்வி.
அட இதுல என்ன இருக்கு பட்டமே வேண்டாம் என்று தான் அஜித் குமார் என்று டைட்டிலில் போட்ட தல, இன்றும் உச்சத்தில் தான் இருக்கிறர்.
அதேபோல் வசதி படைத்தவர்கள் மட்டுமே கிரிக்கெட்டிற்குள் வரமுடியும் என்ற நிலையில் பீகாரிலிருந்து கிரிக்கெட் வந்து ஒட்டு மொத்த கிரிக்கெட் உலகையும் ஆண்ட தோனியும் இன்று உச்சத்தில் தான் இருக்கிறார்.
கஷ்டப்பட்டு வாழ்க்கையில் முன்னேறி தங்கள் துறையில் உச்சத்திலஎ இருக்கும் எல்லோருமே தல தாங்க..