இந்த 5 ராசியினர் அக்கறை காட்டுனா மட்டும் நம்பிராதீங்க!

இந்த பூமியில் கடவுள் மனிதனை படைத்ததே ஒருவரை ஒருவர் பார்த்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையில்தான்.

ஆனால் கடவுளின் நம்பிக்கை பலிக்கவில்லை என்பதை நாம் தினமும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். சக மனிதர்கள் மீதிருக்க வேண்டிய அக்கறையும், மனித நேயமும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.

ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிகளில் பிறந்தவர்கள் மற்றவர்கள் மீது அக்கறை இருப்பது போல நடிப்பார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் மற்றவர்கள் மீது அக்கறை இருப்பது போல பாசாங்கு செய்வார்கள் என்று பார்க்கலாம்.

கும்பம்

அதிகமாக உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது கும்ப ராசிக்காரர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம். சோகமான நண்பனையோ அல்லது கோபமான காதலியையோ சமாதானப்படுத்த அவர்கள் எதையும் செய்வார்கள். இவர்கள் பொதுவாகவே மற்றவர்களுடன் நெருங்கி பழகுபவர்கள் அல்ல. மற்றவர்கள் ஆறுதலுக்காக தன்னை தேடி வரும்போது ஒதுங்கி இருப்பது மிகவும் மோசமானது என்று இவர்கள் நன்கு அறிவார்கள். எனவே விலகி செல்ல சரியான காரணம் கிடைக்கும் வரை இவர்கள் காத்திருப்பார்கள். இவர்களிடம் இருக்கும் பிரச்சினை ஒரு நிமிடம் அக்கறை இருப்பது போல தெரிந்தால் அடுத்த நிமிடமே அக்கறை இல்லாதது போல நடந்து கொள்வார்கள்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இருக்கும் பிரச்சினையே அவர்கள் அக்கறை செலுத்த அவர்களை சுற்றி நிறைய பேர் இருப்பதுதான். அதனால் இவர்களுக்கு அனைவரின் மீதும் அக்கறை செலுத்தும் ஆற்றல் இருக்காது. அவர்கள் தங்களின் ஆதரவு தேவைப்படும் போது கண்டிப்பாக அங்கு இருப்பேன் என்று வாக்களிப்பார்கள் ஆனால் அவர்களால் கொடுத்த வாக்கை நிறைவேற்ற இயலாது. இவர்களுக்கு அனைவரையும் பிடிக்கும் ஆனால் குறிப்பிட்ட நபர்கள் மீது மட்டுமே அக்கறை செலுத்துவார்கள். தனது சமூக பிம்பத்தின் மீது இவர்கள் அதிக அக்கறை செலுத்துவார்கள். எனவே அனைவரின் மீதும் அக்கறை இல்லாவிட்டாலும் இருப்பது போல காட்டிக்கொள்வார்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் எப்பொழுதும் அனைவரின் மீதும் அக்கறை உள்ளதை போலவும் தன்னை சுற்றி நேர்மறை ஆற்றல் இருப்பது பொலவும் காட்டிக்கொள்வார்கள் ஆனால் அது உண்மையல்ல. இவர்களின் மனநிலை அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும் எனவே அவர்களுக்கு சௌகரியமான நேரத்தில் மட்டும்தான் மற்றவர்கள் மீது அக்கறை செலுத்துவார்கள். தனது அனைத்து ஆற்றலையும் மற்றவர்களுக்காக செலவழிக்க இவர்கள் விரும்பமாட்டார்கள். அதேசமயம் மற்றவர்கள் வீழ்வதையும் இவர்கள் விரும்பமாட்டார்கள். அதனால் தனது நலன் முக்கியமென நேர்மையாக கூறுவதற்கு பதில் மற்றவர்கள் மீது அக்கறை உள்ளது போல நடிப்பார்கள்.

கன்னி

முட்டாள்கள் மற்றும் குறுகிய மனப்பான்மை கொண்டவர்களுக்கு அதிக நேரம் செல்வழிக்கக்கூடாது என்பது இவர்களின் எண்ணமாகும். அப்படிப்பட்டவர்கள் மீது இவர்கள் அக்கறை செலுத்துவது போல தோன்றலாம் ஆனால் இவர்கள் அவர்களின் முட்டாள்தனத்தை சுட்டிக்காட்ட சரியான தருணத்திற்காக காத்திருப்பார்கள். மற்றவர்களின் மீது அக்கறை உள்ளது போல நடிப்பது இவர்களுக்கு கைவந்த கலையாகும்.

சிம்மம்

தன்னை சுற்றி இருக்கும் அனைவரின் மீதும் அக்கறையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இவர்களிடம் ஆலோசனைக்காகவும், ஆதரவிற்காகவும் பலரும் வருவார்கள் ஆனால் இவர்கள் ஒரு ஆள்தானே அதனால் இவர்களால் அவற்றை பூர்த்தி செய்ய முடியாது. மற்றவர்களுக்கு இவர்கள் தேவைப்படும் போது அங்கிருந்து நழுவி விடுவார்கள். இவர்கள் மற்றவர்கள் மீது காட்டும் அக்கறையையும் கொடுக்கும் வாக்கையும் தண்ணீரில்தான் எழுதி வைக்க வேண்டும்.