நடிகர் விஷால் நடத்தி வரும் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் மேனேஜர் ஹரி கிருஷ்ணன். இவர் போலீசாரிடம் ரம்யா என்கிற பெண் 45 லட்சம் ரூபாய் வரை பணத்தை ஆபிஸ் கணக்கில் இருந்து கையாடல் செய்துவிட்டதாக புகாரளித்தார்.
இந்த புகார் குறித்து ரம்யா கூறிபோது ஹரியால் தமக்கும், தமது குடும்பத்தினர் அனைவரின் உயிருக்கும் ஆபத்து இருக்கிறது என்று கூறினார்.
மேலும் தான் எந்தவித கையாடலும் செய்யவில்லை என்றும், பொது இடத்தில் வைத்து சரியான கணக்குகளை ஒப்படைக்க நான் தயார் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் நடிகர் விஷாலின் மேனேஜர் ஹரி கிருஷ்ணனின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதாக தற்போது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ரங்கராஜபுரம் பகுதியில் வசித்து வரும் ஹரிகிருஷ்ணன் வீட்டின் முன் அவரின் கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும் இந்த நிலையில் மர்ம நபர்களால் அந்த காரின் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்நிலையத்தில் ஹரி புகார் அளித்துள்ளார்.
மேலும் இந்த கார் கண்ணாடி உடைப்பு சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.