பிக் பாஸ் 4 சீசனில் ரம்யா பாண்டியன்?

தமிழ் திரையுலகில் டம்மி டாப்பாசு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் இளம் நடிகை ரம்யா பாண்டியன்.

இதன்பின் மிகவும் முக்கியமான படமாக கருதப்படும் ஜோக்கர் படத்தில் கதாநாயகியாக நடித்து சிறந்த நடிகை என பேர் எடுத்தார்.

மேலும் தற்போது முன்னணி நடிகர் சூர்யா தயாரிக்கும் படத்தில் நடிகையாக கமிட்டாகி இருக்கிறார்.

பாடங்கள் ஒரு புறம் இருக்க, இவர் ரசிகர்கள் மத்தியில் இந்த அளவிற்கு பிரபலமான காரணம் இவர் நடத்திய ஹாட் போட்டோ ஷாட் தான். ஆம் இந்த போட்டோ ஷூட் சமூக வலைதளங்களில் பெரிதளவில் பேசப்பட்டது.

இதன்பின் தான் இவருக்கு விஜய் டிவியில் குக் வித் கோமாளி, கலக்க போவது யாரு என பல்வேறு நிகழ்ச்சிகளில் போட்டியாளர் ஆகவும்,

நடுவரகவும் இருக்க வாய்ப்புகள் கிடைத்தது.

இந்நிலையில் சமீபத்தில் தனது ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராமில் கலந்துரையாடல் நடத்திய ரம்யா பாண்டியன், பல கேள்விகளுக்கு பதிலித்தார்.

அப்போது அதில் ஒரு ரசிகர் ‘ நீங்கள் பிக் பாஸ் சீசன் 4 கலந்து கொள்ள போகிறீர்களா ‘ என்று கேட்டதற்கு பதிலளித்துள்ளார் ரம்யா.

இதற்கு பதிலளித்த ரம்யா பாண்டியன் தெரியவில்லை, இன்னும் பிக்பாஸ் நிகழ்ச்சி உரிமையாளர்கள் தரப்பிலிருந்து யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை. அப்படித் தொடர்பு கொண்டால் தானே போக முடியும்” என பதிலளித்துள்ளார்.

இதனால் கண்டிப்பாக பிக் பாஸ் சீசன் 4 கில் கலந்து கொள்ள ரம்யா பாண்டியன் மிகவும் ஆர்வத்துடன் இருக்கிறார் என தெரிகிறது.