தமிழ் சினிமாவின் மிகப்பெரும் சக்தியாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் வலிமை படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.
இந்நிலையில் வலிமை படம் கொரொனா பிரச்சனைகள் முடிந்து படபிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.
தற்போது டுவிட்டரில் வலிமை படம் நின்றுவிட்டது என்று சில செய்திகள் பரவி வந்தது.
இதுக்குறித்து விசாரிக்கையில், அப்படியெல்லாம் ஒன்றுமே இல்லை, வலிமை படம் கொரொனா முடிந்து தொடங்கவுள்ளது.
அதில் எந்த மாற்றமும் இல்லை, படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.
அப்படியிருக்க இவை விஜய் ரசிகர்கள் சிலர் கிளப்பிவிட்டது என்றும் தெரிகிறது.
ஏனெனில் மாஸ்டர் படம் தள்ளி செல்வதை அஜித் ரசிகர்கள் கிண்டல் செய்தனர்.
அதற்கு பதிலாக விஜய் ரசிகர்கள் வலிமை படமே நின்றுவிட்டது என கிளப்பிவிட்டனர்.
மேலும், வலினை படத்தின் 60% படபிடிப்பு தற்போது முடிந்துள்ளதாம்.
மீதி 40% படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் கொரொனா அச்சம் காரணமாக படத்தை இந்தியாவிலேயே படமாக்க முடிவு எடுத்துள்ளதாகவும் செய்திகள் கிடைத்துள்ளது.