தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ராசி கண்ணா. இளம்நடிகை என்ற பெயரை விடுத்து வலம் வரும் நடிகை என்ற நிலைக்கு முன்னணி நடிகர்கள் படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
தற்போது நடிகை ராசி கண்ணாவை பற்றி பிரபல சர்ச்சை இயக்குநர் ராம் கோபால் வர்மா படமான நேக்ட் என்ற படத்தில் நடிகையாக அறிமுகமாகிய நடிகை ஸ்ரீ ரபாகா சர்ச்சையான விஷயத்தை கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
ராசி கண்ணா படப்பிடிப்பில் இருக்கும் போது விடியற்க்காலையில் புடவை கட்டி கொடுக்க என்னை அழைத்ததாகவும், அங்கு சென்ற பிறகு அவர் நடித்திருந்த தெலுங்கு படத்தின் டான்ஸ் மாஸ்டர் நீ என்ன இங்கே, புடவை கட்டுவதற்கு இங்கு வேற ஆள் இல்லையா என்று அசிங்கப்டுத்தி அனுப்பியதாகவும் கூறியுள்ளார்.
மேலும் இளம் நடிகை என்பதால் என்னை பல முறை காக்க வைத்தும் உள்ளார் என்று கூறியுள்ளார். வளர்ந்து வரும் நிலையில் இருக்கும் நடிகை ராசி கண்ணா இளம்நடிகை ஸ்ரீ ரபாகாவிடம் நடந்து கொண்ட செய்தியால் சினிமா வட்டாரத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.