இனி இந்த மொபைல் கம்பெனி போன்களுக்கு சார்ஜர் வழங்கப்படாது..!!

எந்த புதிய போன்கள் வாங்கும் போது, சார்ஜர், ஹெட்போன் உள்ளிட்ட சில அடிப்படை உபகரணங்களும் செல்போன் நிறுவனத்தால் வழங்கப்படும்.

சார்ஜர் என்பது ஸ்மார்ட்போனுக்கு மிக முக்கிய தேவையாக உள்ள நிலையில், இனி வரும் நாட்களில் இவை வழங்கப்படுவது நிறுத்தப்படலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

இதை முதலில் ஆப்பிள் நிறுவனம் இதனை நடைமுறைப்படுத்தும் என்று ஏப்ரல் மாதம் கூறப்பட்ட நிலையில், சாம்சங் நிறுவனம் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், முந்தைய ஸ்மார்ட்போன்களை வாங்கும்போது பயனர்களுக்கு ஏற்கனவே சார்ஜர்கள் கிடைத்திருக்கும் நிலையில், புதிய போன்களுக்கும் வழங்குவது தேவையற்றது என சாம்சங் கருதுவதாக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இ-வேஸ்ட் எனப்படும் எலக்ட்ரானிக் குப்பைகள் அதிகமாக சேராமல் இருக்கும் முயற்சியாகவும் இது இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கு பயனாளர்கள் எவ்வளவு பாதிக்கப்படுவார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.