Tinder எனப்படுவது பிரபலமான டேட்டிங் அப்பிளிக்கேஷன் ஆகும்.
இந்த அப்பிளிக்கேஷனில் தற்போது Face to Face எனும் புதிய வசதி அறிமுகம் செய்யப்படுகின்றது.
வீடியோ அழைப்புக்களை இந்த வசதியின் ஊடாக மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையான காலப் பகுதியில் உலகை ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் காரணமாக பில்லியன் கணக்கான மக்கள் வீட்டில் முடங்கவேண்டிய சூழ்நிலை காணப்பட்டது.
இதன்போது உறவினர்களுடன் தொடர்புகொள்ள பல்வேறு வீடியோ கோலிங் அப்பிளிக்கேஷன்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன.
இதன் பின்னர் பல புதிய வீடியோ அழைப்பு அப்பிளிக்கேஷன்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த வரிசையிலேயே தற்போது Tinder நிறுவனமும் Face to Face எனும் வசதியை அறிமுகம் செய்கின்றது.