அன்ரோயிட் 11 பதிப்பு செப்டெம்பர் 8 ஆம் திகதி அறிமுகம் செய்யப்படுமா?

உலக அளவில் அதிகமான மொபைல் சாதனங்களில் பயன்படுத்தப்பட்டு வரும் இயங்குதளமாக அன்ரோயிட் காணப்படுகின்றது.

இதன் புதிய பதிப்புக்களை கூகுள் நிறுவனம் வருடம்தோறும் அறிமுகம் செய்து வருகின்றது.

இவ் வருடம் அன்ரோயிட் 11 எனும் பதிப்பினை அறிமுகம் செய்யவுள்ள நிலையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகியிருந்தது.

எனினும் இந்த தகவலை கூகுள் நிறுவனம் மறுத்துள்ளது.

கடந்த வருடம் அன்ரோயிட் 10 இயங்குதளப் பதிப்பானது செப்டெம்பர் மாதம் 3 ஆம் திகதி அறிகம் செய்யப்பட்டிருந்த நிலையில் இவ் வருடமும் அதே காலப் பகுதியில் அன்ரோயிட் 11 அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்ப்பு நிலவியது.

இவ்வாறான நிலையிலேயே கூகுள் இந்த தகவலை மறுத்துள்ளது.

இதேவேளை குறித்த இயங்குதளம் எப்போது அறிமுகம் செய்யப்படும் என தகவலை கூகுள் நிறுவனம் திட்டவட்டமாக தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.