சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் ஆறாத நாள்பட்ட புண் வெட்டுக்காயத்தையும் உடனே ஆற்றும் அற்புத மூலிகையாகும்.
சில பேருக்கு காலில் புண் வந்தால் சீக்கிரம் ஆறாமல் இருக்கும். எந்த மருந்து தடவினாலும் ஆறவே ஆறாது. அதிலும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கால்களில் புண் ஏற்பட்டால் அவ்வளவு சீக்கிரம் ஆறாமல் போகும்.
சிலபேருக்கு புண் ஆழமாக ஏற்பட்டு ஆறாமல் இருந்தால் காலையே எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுவது தற்போது வழக்கமாக மாறிவிட்டது.
இந்த மாதிரியான புண் உள்ளவர்கள்,வெட்டுக்காயம் ஆறாமல் உள்ளவர்கள் தற்போது கூறும் மூலிகையை சொல்லும் முறையில் பயன்படுத்தினால் ஆச்சரியப்படும் அளவிற்கு ஆறாமல் இருக்கும் புண்களும் வெட்டுக்காயங்களும் ஆறி உங்கள் கால் பழைய நிலைமைக்கு வந்துவிடும்.
மூலிகையின் பெயர்
- வெட்டுக்காய பச்சிலை. இதை மூக்குத்திப்பூ,கேட்ரடி பூண்டு என்றும் சொல்வார்கள்.
- இது அனைத்து இடங்களிலும் வளரக்கூடியதாகும்.
- இதன் இலை சொரசொரப்பாக இருக்கும்.
- இதன் பூ மூக்குத்தி போன்ற வடிவமைப்பை கொண்டிருக்கும். கொப்புளம், தீக்காயம் போன்றவற்றையும் ஆற்றுவதோடு, புற்றுநோயால் ஏற்படும் புண்ணையும் ஆற்றிவிடும்.
பயன்படுத்தும் முறை :
- இதன் இலைகளை பறித்து நன்றாக கழுவி இரண்டு கைகளுக்கு இடையில் வைத்து கசக்கினால் இதிலிருந்து பச்சை நிற சாறு வெளிவரும்.
- இந்த சாறை நேரடியாக புண்ணின் மேல் படும்படி பிழிந்து விட வேண்டும்.
- அதன்பின் கசக்கிய இலையை சாறு மேலேயே வைத்து வெள்ளை துணி கொண்டு கட்டிவிடுங்கள்.
- கட்டில் ஈரம் குறையும் போதெல்லாம் கட்டின் மேல் தண்ணீர் தெளித்துக் கொள்ள வேண்டும்.
- இதேபோல் ஒரு நாளைக்கு இரண்டு முறை கட்ட வேண்டும். ஒரு மாதத்திற்கு இதே போல் தொடர்ந்து செய்து வந்தால் நீங்களே ஆச்சர்யப்படும் அளவிற்கு புண் முழுமையாக ஆறிவிடும்.
- இவ்வாறு உள்ள அரிய மூலிகைகளை நாம் உதாசினப்படுத்தாமல் அதன் பலன் அறிந்து பயன்படுத்தி அதை அழியாமல் பயன்படுத்தி உடலை பாதுகாப்போம்.