ஹாலிவுட் மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் நடித்து வந்தவர் நடிகை நியா ரிவேரா. இவர் கடந்த 8ம் தேதி தனது 4 வயது மகனுடன் கலிபோர்னியா ஏரியில் படகு சவாரிக்கு சென்றுள்ளார்.
சில மணி நேரங்கள் கழித்து அந்தப் படகில் 4 வயது குழந்தை மட்டுமே தனியாக இருந்ததை மற்றொரு படகில் வந்தவர்கள் அவதானித்துள்ளனர்.
மேலும் படகில் பெரியவர்களுக்கான லைஃப் ஜாக்கெட் இருப்பதையும் அவதானித்ததுடன், குறித்த படகில் செல்போன் ஒன்றும் கிடைத்துள்ளது.
இதனையடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், படகு சவாரியின் போது நடிகை ஏரியில் விழுந்திருக்கலாம் என்று காவல்துறையினர் இரவு முழுவதும் தேடியுள்ளனர்.
ஆனால் நடிகையின் உடல் கிடைக்கவில்லை. நடிகை நியா ரிவேராவுக்கும், அவரது காதலர் ரியானுக்கும் பிரச்னை இருந்து வந்ததாகவும், ஆதலால் விபரீத முடிவினை எடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.