காதல் என்ற உணர்வு மனித இனத்திற்கு மட்டும் உரித்தானது இல்லை. காகத்தின் காதல் கதையை கேட்டால் இனி வர்ணிக்கும் கவிஞர்கள் அனைவரும் காதலில் காகத்தையும் சேர்த்துவிடுவார்கள். நிஜமாகவே காகம் தனக்கு காதல் தோல்வி ஏற்பட்டால் தற்கொலை செய்து கொள்கிறதா என்று கேட்டால் ஆமாம் என்று தான் கூறவேண்டும்.
மனிதர்களுக்கு காதல் உணர்வு எப்படி வருகின்றதோ அது போலவே பல மடங்கு உணர்ச்சி மிக்கது காகத்தின் காதல் உணர்வு. காகங்கள் சில நேரங்களில் தங்களுடைய ஜோடியை கவர்ந்து இழுக்க வித்தியாசமாக வானில் பறந்து வித்தைகள் காட்டும். அதுபோல வித்தியாசமாக ஒரு காகம் பறப்பதை நீங்கள் பார்த்தீர்கள் என்றால் அது காதல் மோகத்தில் மூழ்கி இருக்கிறது என்று அர்த்தம்.
கல்லுக்குள்ளே ஈரம் போல, காக்கைகுள்ளும் காதல் இருக்கு. புறாவை தான் பலரும் தூதுவிட்டு காதல் மழை பொழிந்து வருகின்றோம். உண்மையில் காதல் பறவை என்றால் அது காகம் தான். மனிதனைப் போலவே காகங்களும் நட்பில் தான் காதலை உருவாக்குகின்றது. பல பேரை காதலித்து ஒருவரை கரம்பிடிக்கும் பழக்கம் எல்லாம் காக்கைக்கு கிடையாதாம்.
தனக்குப் பிடித்த அந்த ஒரு ஜோடியுடன் மட்டும்தான் காகம் இணையும். ஆண் காகம், பெண் காகத்தை எப்பொழுதும் விட்டுக்கொடுக்காதது. ஆனால் ஆண்-பெண் இரு காகமும் இணைந்து இனவிருத்தி வரை மட்டுமே மகிழ்ச்சியாக இருக்குமாம். முட்டையிடும் நேரம் வந்தால் ஆண் காகம் கூடு கட்ட ஆரம்பித்து விடுமாம். ஆண் காகத்தின் காதல் வாழ்க்கையானது அத்தோடு முடிந்து விடுமாம்.
முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் வரை பெண்காகம் வெளியே வராதாம். அப்பொழுது பெண் காகத்துக்கு உணவு, தண்ணீர் கொடுப்பது எல்லாமே ஆண் காகத்தின் வேலையாகத்தான் இருக்குமாம். குஞ்சு பொரித்த உடன் ஆண் காகத்தை பெண்காகம் வெறுத்து ஒதுக்கி விடுமாம். காதல் உணர்வு சிறிது, சிறிதாக குறைந்து குஞ்சுகளை கவனிக்க துவங்கிவிடும்.
ஆண் காகம் பற்றி சிறிதும் பெண் காகம் கவலைப்படுவதே இல்லையாம். இதன் காரணமாக ஆண் காகம் விரக்தியடைந்து செய்வதறியாது நிற்கும் பொழுது உணவு, தண்ணீர் இல்லாமல் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொள்ளுமாம். மேலும், சில நேரங்களில் மரத்தில் மோதி, கிளைகளுக்கு இடையில் கழுத்தை நெரித்து இறந்து விடுமாம்.