த்ரிஷா வெளியிட்டுள்ள புகைப்படம் தன்னை காபி நடித்திருப்பதாக கூறிய மீரா மிதுன்!

த்ரிஷா வெளியிட்டுள்ள புகைப்படம் தன்னை காபி அடித்திருப்பதாக மீரா மிதுன் கூறி உள்ளார்.

த்ரிஷா கடந்த சில வாரங்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் இருந்து சில காலம் விலகி இருக்கப் போவதாக தெரிவித்திருந்தார்.

அதற்காக எந்த காரணத்தையும் தெரிவிக்காத அவர், டிஜிட்டலில் இருந்து விலகி இருக்கப் போவதாக மட்டும் தெரிவித்திருந்தார்.

கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாத் துறையில் ஹீரோயினாக இருக்கும் த்ரிஷா திடீரென இப்படி ஒரு முடிவெடுத்தது ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சி ஏற்படுத்தியது.

இருப்பினும் வருத்தத்தில் இருந்த ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக நேற்று த்ரிஷா ஒரு செல்பி புகைப்படத்தை பதிவிட்டு சமூக வலைதளத்திற்கு மீண்டும் திரும்பினார்.

ஒரு ஜிம் உடையில் அவர் மார்பில் குத்தி உள்ள நீமோ டாட்டு தெரியும் அளவிற்கு அவர் அந்த போட்டோவை எடுத்து உள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகவும் வேகமாக வைரலாகி வருகிறது. இந்நிலையில் இந்த புகைப்படம் தன்னுடைய தோற்றத்தை காபி அடித்தது போல இருப்பதாக நடிகை மீரா மிதுன் ட்விட்டரில் பதிவிட்டதோடு திரிஷாவிற்கு எச்சரிக்கையும் விடுத்திருந்தார்.

இந்நிலையில் இதனை இன்று கையில் எடுத்திருக்கும் நெட்டிசன்கள் தனது பாணியில் காணொளியினை வெளியிட்டு அசத்தியுள்ளனர்.