ஹெரோயின் போதைப்பொருளுடன் ஏழு பேர் கைது..!!

கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் ஏழு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்றைய தினம் கிளிநொச்சி உதயநகர் பகுதியில் வைத்து 31 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் 100 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு வத்தளை பகுதியிலிருந்து குறித்த ஹெரோயின் விற்பனை செய்வதற்காக கிளிநொச்சி கொண்டுவரப்பட்டள்ளது.

சந்தேக நபர் தனது உள்ளாடைக்குள் பொலீத்தின் பையினாள் சுற்றி மறைத்திருந்த நிலையில் போதைப்பொருள் பொலிஸாரினால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இரவு 10.45 மணியளவில் தர்மபுரம் பகுதியில் அமைந்துள்ள கடை ஒன்றிற்குள் இருந்து ஆறு இளைஞர்கள் 290 மில்லிக் கிராமம் ஹெரேயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் 19 தொடக்கம் 23 வயதுக்குட்ப்பட்டவர்கள் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கிளிநொச்சி பிரதிப் பொலிஸ்மா அதிபரின் விசேட பிரிவினரினால் அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேட்கொண்டுவருகிறார்கள்.